|
புறநிலை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள் : |
| `தென்றல் இடைபோழ்ந்த தேனார் நறுமுல்லை முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றான், நிற்காப்ப - என்றும் தீரா நண்பின் தேவர் சீர்சால் செல்வமொடு, பொலிமதி சிறந்தே' | | | - யா. கா. 36 மே. | | |
எனவும், |
கைக்கிளை மருட்பாவிற்குச் செய்யுள் : |
| `திருநுதல் வேர்வரும்பும்; தேங்கோதை வாடும் இருநிலம் சேவடியும் தோயும்; - அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும்; ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே' | | | - பு. வெ. கை. 3 எனவும், | | |
வாயுறை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள்: |
| `பலமுறை ஓம்பப் படுவன கேண்மின் ! சொலல்முறைக்கண் தோன்றிச் சுடர்மணித்தேர் ஊர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரிலார் மாட்டும் சிலமுறை அல்லது செவ்வங்கள் நில்லா; விலங்கும் எறிபடையும் வீரமும் அன்பும் கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறி னாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா(து); அனைத்தாதல் நீயிரும் காண்டிர்; - நினைத்தக்க கூறிய மெய்மொழி பிழையாது, தேறிநீர் ஒழுகின், சென்றுபயன் தருமே' | | | - யா. கா. 36 மே. | | |
எனவரும். |
செவியறிவுறூஉ மருட்பாவிற்குச் செய்யுள் : |
| `பல்யானை மன்னர் முருங்க அமருழந்து, கொல்யானைத் தேரொடும் கோட்டந்து - நல்ல தலையாலங் கானம் பொலியத் - தொலையாப் | | | | | |