செய்யுளியல் - நூற்பா எண் 40

257

 
  படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர்
அடுகளம் வேட்டோன் மருக ! - அடுதிறல்
அழி நிமிர்தோள் பெருவழுதி ! எஞ்ஞான்றும்
ஈரம் உடையையாய், என்வாய்ச் சொற்கேட்டி;
உரிய உழவரை செஞ்சனுங்கக் கொண்டு
வருங்கால் உழவர்க்கு மேளாண்மை செய்யல்;
மழவர் இழைக்கும் வரைக்கால் நிதிஈட்டம்
காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல்;
அமைத்த அரும்பொருள் ஆறன்றி வௌவல்;
இனத்தைப் பெரும்பொருள் ஆசையி னாற்சென்று;
மன்றம் மறுக அகழாதி; - என்றும்
மறப்புற மாக மதுரையார் ஓம்பும்
அறப்புறம் ஆசைப்ப டேற்க ; - அறத்தால்
அவையார் கொடுநாத் திருத்தி, - நவையாக
நட்டார் குழிசி சிதையாதி; - ஒட்டார்
செவிபுதைக்கும் தீய கடுஞ்சொல் - கவிபடைத்தாய்!
கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகி,
செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதி;
அற்றம் அறிந்த அறிவினாய்! - மற்றும்
இவைஇவை வீயா தொழுகின், நிலையாப்
பொருகடல் ஆடை நிலமகள்
ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே'
 
 

 - யா. கா. 36 மே.

 
எனவும் வரும். பிறவும் அன்ன. (40)

விளக்கம்

புறநிலை வாழ்த்துச் சமனிலை மருட்பாவிற்குச் செய்யுள்:

  `அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்
முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன்
கழலிணை பொதுவில்காப் பாக,
வழிவழி சிறந்து வாழியர் பெரிதே.'
 
 

- சி. சே. கோ. 81