258

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

கைக்கிளைப்பொருளதாகிய வியனிலைமருட்பாவிற்குச் செய்யுள்:

  `பருந்தளிக்கும் முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி,
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும்; - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணன்அக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே.'
 
 

- சி. செ. கோ. 82

 

வாயுறை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள் :

  `வம்மின் நமரங்காள் ! மன்றுடையான் வார்கழல்கண்டு
உய்ம்மின், உறுதி பிறிதில்லை, - மெய்ம்மொழிமற்று
என்மொழி பிழையா தாகும்;
பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே.'
 
 

- 83

 

செவியறிவுறூஉ மருட்பாவிற்குச் செய்யுள்:

  `வாழ்த்துதின் தில்லை, நினைமின் மணிமன்றம்,
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு, - வீழ்த்த
புறநெறி ஆற்றாது அறனெறி போற்றி,
நெறிநின் றொழுகுதிர் மன்ற;
துறைஅறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே.'
 
 

- 84

 

ஒத்த நூற்பாக்கள்

  `மருட்பா ஏனை இருசார் அல்லது
தான்இது என்னும் தனிநிலை இன்றே.'
 
 

- தொ. பொ. 937

 
  `புறநிலை வாயுறை செவியறி வுறூஉவென
திறனிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
பண்புற முடியும் பாவின என்ப.'
 
 

- 473

 
  `வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.'
 
 

- 422