| `வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன.' | | | - தொ. பொ. 423 | | |
| `வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.' | | | - 424 | | |
| `செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே.' | | | - 426 | | |
| `கைக்கிளை தானே வெண்பா ஆகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.' | | | - 431 | | |
| `வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்.' `இருதலைக் காமம் அன்றிக் கைக்கிளை ஒருதலைக் காமம் ஆகக் கூறிய இலக்கண மரபின் இயல்புற நாடின், அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே பெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன் இறுதி எழுசீர் ஆசிரி யம்மே.' | | | - கடியநன்னியம் | | |
| `கைக்கிளை மருட்பா ஆகி வருகால் ஆசிரியம் வருவ தாயின் மேவா முச்சீர் எருத்திற் றாகி, முடியடி எச்சீ ரானும் ஏகாரத்து இறுமே.' | | | - கடியநன்னியம் | | |
| `புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே அறநிலை வஞ்சியும் கலியும் ஆகாஅ, வெண்பா ஆசிரிய இயலான் வருமே, வஞ்சி கலிஅவற்று இயலா; அவற்றுள் இடைஇரு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும் கடையெழு சீரிரண்டு அகவியும் வருமே.' | | | - நல்லாதம் | | |