|
| `மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.' | | | - குறள் 4 | | |
இதனுள் நிலமிசை என்றும் நீடுவாழ் என்றும் வார் என்றும் அலகிட மாறுபடாதாம். |
| `பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும் ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால், -- நீடுநீர் நல்வயல் ஊரன் நறுநஞ்சாந் தணியகலம், புல்லலின் ஊடல் இனிது.' | | | - யா. கா. 45 மே. | | |
இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச் சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச் சிதையாதாம். இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க. |
(43) |
விளக்கம் |
வகையுளி பொருளை நோக்காது ஓசையையே நோக்கிச் சீர் அமைப்பது. பாடுநர்க்கும் முதலியவற்றை நேர் நிரை நேர் ஆகிய கூவிளங்காயாகப் பிரிப்பவே செய்யுள் அமையும். தேமாந்தண்பூ வாகப்பிரிப்பின் செய்யுள் கெடும். எனவே, ாக்களுக்கு ஓசையே இன்றியமையாதது என்பது உணரப்படும். |
ஒத்த நூற்பாக்கள் |
| `அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே.' | | | - தொ. பொ. 323 | | |
| `அருள்நோக்கு நீரார் அசைசீர் அடிக்கண் பொருள்நோக்கா தோசையே நோக்கி, - மருணீக்கிக் கூம்பவுங் கூம்பா தலரவும் கொண்டியற்றல், வாய்ந்த வகையுளியின் மாண்பு.' | | | | | |