`போந்து போந்து சார்ந்து சார்ந்து | எழுத்து 4 |
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து | 5 |
வண்டு சூழ, விண்டு வீங்கி | 6 |
நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம், | 7 |
ஊர்வாய் ஊதை வீச, ஊர்வாய் | 8 |
மதியேர் வண்டோடு ஒல்கி மாலை | 9 |
நன்மணம் கமழும் பன்னெல் ஊர ! | 10 |
அமையேர் மென்தோள், ஐஅரி நெடுங்கண், | 11 |
இணைஈர் ஓதி, ஏந்துஇள வனமுலை, | 12 |
இறும்புஅமல் மலரிடை எழுந்த மாவின் | 13 |
நறுந்தழை துயல்வரூஉம் செறிந்துஏந்து அல்குல், | 14 |
அணிநடை அசைஇய வரிஅமை சிலம்பின், | 15 |
மணிமருள் வணர்குழல், வளர்இளம் பிறைநுதல், | 16 |
ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு, | 17 |
நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர், | 18 |
இருந்தளமலரளவு சுரும்புலவு நறுந்தொடை | 19 |
கலனளவு கலனளவு நலனளவு நலனளவு | 20 |
பெருமணம் புணர்ந்தனை என்ப; அஃது | |
ஒருநீ மறைப்பது ஒழிகுவது அன்றே' | - யா. கா. 45 மே. |