செய்யுளியல் - நூற்பா எண் 45, 46

277

 

[எளிய சொல்லால் செய்தியைப் படம் பிடித்ததுபோல விளக்கிக்காட்டியமை காண்க.]

  `சேரி மொழியான் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன்என மொழிப புலனுணர்ந் தோரே.'
 
 

- தொ. பொ. 553

 
  `ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து
ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்.'
 
 

- 554

 
  `நாலெழுத்து ஆதி ஆக ஆறுஎழுத்து
ஏறிய நிலத்தே குறள்அடி என்ப.'
 
 

- 348

 
  `ஏழ்எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே
ஈரெழுத்து ஏற்றம் அவ்வழி யான.'
 
 

- 349

 
  `பத்துஎழுத்து என்ப நேர்அடிக்கு அளவே
ஒத்த நால்எழுத்து ஏற்றலங் கடையே.`
 
 

- 350

 
  `மூவைந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே
ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.'
 
 

- 351

 
  `மூவாறு எழுத்தே கழிநெடிற்கு அளவே
ஈரெழுத்து மிகுதலும் இவண்பெறும் என்ப.
 
 

- 352

 

45

குறிப்பிசை ஆமாறு

755. எழுத்துஅல் இசைஎன, அசைசீர் ஆக,
நிறைக்கப் படுதல் குறிப்பிசை என்ப.
 
     
இது குறிப்பிசை ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : எழுத்து ஓசை அல்லாத முற்கு வீளை இலதை அனுகரணம் முதலியன
செய்யுள்அகத்து வந்தால், அவற்றையும் அசையும் சீருமாக அலகிட்டுத்தளையும் அடியும்
தொடையும் பிழையாமல் கொண்டு நிரப்புதலைக் குறிப்பிசை என்று கூறுவர் ஆசிரியர்
என்றவாறு.