282

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     வரலாறு :
  `பொன்னின் அன்ன புன்னை நுண்தாது
மணியின் அன்ன நெய்தலங் கானல்'
 
 

 - யா. வி. 95 மே.

 
என வரும்.

இயைபுவண்ணம் இடையெழுத்து மிக்கு வருவது ;

  `இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே'  
 

- தொல். பொ. 530

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `வால்வெள் அருவி வரைமிசை இழியக்
கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும்'
 
 

- யா. வி. 95 மே.

 
என வரும்.

அளபெடைவண்ணம் அளபெடை பயின்று வருவது;

  `அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்'  
 

- தொல். பொ. 531

 
என்பதுஆகலின்.
     வரலாறு :
  `தாஅட் டாஅ மரைமல ருழக்கி'  
 

- யா கா. 20 மே.

 
எனவரும்.

நெடுஞ்சீர்வண்ணம் நெட்டெழுத்துப் பயின்று வருவது;

  `நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்'  
 

- தொல். பொ. 532

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `நீரூர் பானா யாறே, காடே
நீலூர் காயாம் பூவீ யாவே'
 
 

- யா. வி. 95 மே.

 
என வரும்.