284

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

அகப்பாட்டுவண்ணம் முடியாத் தன்மையான் முடித்தல் மேலதாம்;

(இறுதி அடி இடையடி போன்று நிற்பது.)

  `அகப்பாட்டு வண்ணம்,
முடியாத் தன்மையின் முடித்தல் மேற்றே'
 
 

 - தொ. பொ. 536

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `பன்மீன் உணங்கல் படுபுள் ஒப்பியும்
புன்னைநுண் தாது நம்மொடு தொகுத்தும்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியும்
மணந்ததற் கொவ்வான் தணந்துபுற மாறி
இனைய னாகி ஈங்குனைத் துறந்தோன்,
பொய்தல் ஆயத்துப் பொலந்தொடி மகளிரொடு
கோடுயர் வெண்மணல் ஏறி,
ஓடுகலன் காணும் துறைவன்; தோழி !'
 
 

 - யா. வி. 95 மே.

 
என வரும்.

புறப்பாட்டுவண்ணம் முடிந்தது போன்று முடியாதாகி வரும்;

(இறுதியடிப் புறத்ததாகவும் தான் முடிந்தது போன்று நிற்பது.)

  `புறப்பாட்டு வண்ணம்,
முடிந்தது போன்று முடியா தாகும்'
 
 

- தொ. பொ. 537

 
என்ப ஆகலின்,
     வரலாறு :
  `நிலவுமணல் அகன்துறை வலவன் ஏவலின்
எரிமணிப் புள்ளினம் ஒலிப்ப நெருநலும்
வந்தன்று கொண்கன் தேரே; இன்றும்
வருகுவ தாயின் ஒன்றுபு துதைந்த
புன்னைத் தாதுகு தண்பொழில் அகத்து,