|
எண்ணுவண்ணம் எண்ணுப் பயின்று வரும்; |
| `எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்ழு | | | - தொ. பொ. 540 | | |
என்ப ஆகலின், வரலாறு : |
| `நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின் அளப்பரி யையே; நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையே ...... ...... ...... ...... தவாலிய ரோஇவ் வுலகமொ டுடனே` | | | - பதிற். 14 | | |
என வரும். |
அகைப்புவண்ணம் அறுத்து அறுத்துப் பயிலும்; |
(விட்டு விட்டு ஒலிப்பது.) |
| `அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்ழு | | | - தொல். பொ. 541 | | |
என்ப ஆகலின், வரலாறு : |
| `தொடுத்த வேம்பின் மிசைத்து தைந்த போந்தை அடைய அசைந்த ஆரம்ழு | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
தூங்கல்வண்ணம் வஞ்சிஉரிச்சீர் பயின்றுவரும்; |
| `தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்ழு | | | - தொல். பொ. 542 | | |
என்ப ஆகலின், வரலாறு : |
| `வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்ழு | | | - பட். 1, 2 | | |
என வரும். |