ஏந்தல்வண்ணம் சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்க வரும்; |
(ஒரு சொல்லே மிக்கு வருவது.) |
| `ஏந்தல் வண்ணம், சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்' | | | - தொல். பொ. 543 | | |
என்ப ஆகலின். வரலாறு : |
| `கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா கூடலுள் கூடலே கூடலால் - கூடல் அருவிய முல்லை அரும்பவிழ் மாலைப் பிரியிற் பிரிவே பிரிவு' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
உருட்டுவண்ணம் அராகம் தொடுக்கும்; |
| `உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்' | | | - தொல். பொ. 544 | | |
என்ப ஆகலின். வரலாறு : |
| `தாதுறு முறிசொறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்' | | | - யா. கா. 32 மே. | | |
என வரும். |
முடுகுவண்ணம் நாற்சீர்அடியின் மிக்கு ஓர்அடி அராகத்தோடு ஒக்கும்; |
| `முடுகு வண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே' | | | - தொல். பொ. 545 | | |
என்ப ஆகலின். |