298 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | இதனுள் திரையவோஒ என்புழி, இயற்பெயர் சார்த்தி அளபு எடுத்தமையால் அஃது எழுத்தானந்தமாம். (இது பொய்கையார் வாக்கு) | | `என்னின் பொலிந்தது இவள்முகம் என்றெண்ணித் தன்னின் குறைபடுப்பான், தண்மதியம் -- முன்னி, விரிந்திலங்கும் வெண்குடைக்கீழ்ச் செங்கோல் விசயன் எரிந்திலங்கு வேலின் எழும்.' | | | - யா. கா. 46 மே. | | | இதனுள் விசையன் என்னும் பாட்டுடைத்தலைவன் பெயரின்பால் எரிந்து என்னும் சொல் புணர்ந்தமையால், இது சொல்லானந்தமாம். இவ்விருவகை ஆனந்தமுமன்றிப் பிறவாறு உளவேனும் காண்க. | (50) | விளக்கம் | இவ்வானந்தக் குற்றங்கள் சங்கச் சான்றோர்களுக்கும். தொல்காப்பியனார் முதலாயினாருக்கும் உடன்பாடல்ல என்பதை மலைபடுகடாத்தில் நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியரும் உவமவியலுரையுள் சுட்டியுள்ளார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, தூக்கு, தொடை என்ற அறுவகைப்பட்ட ஆனந்தங்களுள் இவ்வாசிரியர் முதல் இரண்டு ஆனந்தங்களே சுட்டி, புகழ்ச்சிநிலை திரிந்த பொருளானந்தம், யாப்பு, தூக்கு, தொடை இவை திரிந்த ஆனந்தம் ஆகியவற்றை யாப்பருங்கல விருத்தியில் காண்க என விடுத்தார். பொருளானந்தமாவது - பாட்டுடைத் தலைவன் நாட்டில் யாதானும் ஒன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற இடத்து அத்திணைக்கு உரிய இறைச்சிப் பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்வதூஉம், புகழ்தலுற்ற இடத்து ஆகாதபெற்றியின் மங்கலம் அழியச் சொல்வதூஉம், மங்கலமாகிய உவமையான் மங்கலமில்லாத உபமேயத்தை உவமிப்பதூஉம், தலைமகனோடு உவமிக்கப்பட்டதற்கு இடையூறுபடச் சொல்வதூஉம் முதலாக உடையன. | | |
|
|