செய்யுளியல் - நூற்பா எண் 50

299

 
வரலாறு :
  `முறிமே யாக்கைதன் கிளையொடு துவன்றிச்
சிறுமை யற்ற களையாப் பூசல்'
 
 

- மலைபடு. 313-14

 
என மலைபடுகடாத்துக் கூத்தரை ஆற்றுப்படுப்பான் நீர் போம் வழியில் இன்னவும்
இன்னவும் ஏதங்களாவன, அவற்றைச் சாராதே போமின் என்பான், குரங்கு ஒரு
வரைமேலிருந்து வழுவி ஒரு விடரகம்புக்கு விழுந்ததுகண்டு மற்றைக் குட்டியும் தாயும்
விடரகம்புக்கு வீழ்ந்தன; வீழக் குரங்குகள் எல்லாம் அவற்றுக்கு இரங்கி அழுது
பெரியதோர் ஆரவாரம் எழுந்தது. அவ்வரையை ஒருவிப்போமின் என்றான். அவன்
மலைக்குரிய இறைச்சிப் பொருளாகிய குரங்கிற்கு இடையூறு சொன்னமையால் இது
பொருளானந்தம்.
  `கணங்கொள் தோகையின் கதுப்புஇகுத்து அசைஇ
விலங்குமலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர், நிற்புறஞ் சுற்ற'
 
 

- மலைபடு. 44-46

 
என்பது, பீலி விரித்துப் பல மயிலிருந்தாற்போல வழிவந்து அசைந்த வருத்தத்தால்
தத்தங் கேசங்களை எடுத்து முடிக்க கில்லாது விரித்திருப்பர் அவன் மலைமேல்
வழிபோம் கூத்தப்பெண்டிர் என்று புகழ்தலுற்றான். பெண்சாதிகள் ஊறுபட்டு அழுகை
நிகழ்ந்தவிடத்து மயிர் விரத்திருப்பார்; அவ்வகை மங்கலம் அல்லாத மயிர்விரியை
அவன் நாட்டோடும் புகழ்ந்தமையால் இதுவும் பொருளானந்தம்.
  `பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை'
 
 

- மலைபடு. 99-101

 
என்பது நாடு புகழ்தலுற்றான் மற்று மங்கலம் உளவாக வைத்து வானத்துள் துறுமித்
தோன்றும் கார்த்திகை மீனொடு கடைப்பட்டார் தின்னும் அடகாகிய முசுண்டையின்
பூவை ஒப்பித்தமையான் இஃது உவமக்காட்சியுள் ஊனம் தோன்றிய ஆனந்த உவமை.