|
| `திண்டேர் வயவரைச் சேவைவென் றானன்ன தேங்கவுண்மா வண்போ தமன்ற வழைநிழல் நீக்கி வார்சிலம்ப ! நண்போ நினையின்பொல் லாதது;நிற்க, என் நன்னுதலாள் கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே.' | | | | | |
இதனுள் தலைமகனோடு உவமிக்கப்பட்ட யானையைத் துரந்தான் என ஊறுபடச் சொன்னமையான் இதுவும் உவமக்காட்சியின் ஊனம் தோன்றிய ஆனந்த உவமம். |
| `வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் -- வள்ளற்கு மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாரும் மேலார் விரைந்து' | | | | | |
இதனுள் புலியினோடு உவமிக்கப்படுகின்ற தலைமகனாகிய வீரனோடு நாயை உவமித்தமையால் இறப்ப இழிந்த ஆனந்த உவமை. |
| `இந்திரனே போலும் இளஞ்சாத்தன், சாத்தற்கு ம்தரமே போன்றிலங்கும் மல்லாகம் -- மந்தரத்துத் தாழருவி போன்றுளது தார்மாலை அம்மாலை ஏழுலகும் நாறும் இணர்' | | | | | |
இதனுள் கீழ்மகனாகிய சாத்தனைக் குலமன்னரை உவமிக்கற் பாலனவற்றை அவனுக்குப் பரிக்கலாகாமை உவமித்தமையின் இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை. |
| `சென்றுபடு பருதியில் சிவந்த தோற்றத்தை' | | | | | |
இதனுள் படுஞாயிற்றுக்கு உவமையாகக் காட்டலின் இறந்துபாட்டுவமையானந்தம். |
| `தீயி னன்ன ஒண்செங் காந்தள் தூவல் கலித்த புதுமுகை ஊன்செத்து அறியாது எடுத்த புன்புறச் சேவல் | | | | | |