செய்யுளியல் - நூற்பா எண் 50

301

 
  ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்'
 
 

- மலைபடு. 149-50

 
     இதனுள் தீப்போலாம் உருவம் தோன்றும் செங்காந்தட் பூவினை ஊன் என்று
கருதி அறியாது எடுத்த பருந்து காலின் இடுக்கி வாயில் குத்தி ஊன் அன்மையின்
கைவிட்டது என்று காந்தட்பூவினது சிவப்பினைக் குணனேறச் சொல்லுவான்,
அவாவிச்சென்றது கொண்டு அவாவியதன்மையான் விட்டது என்று பரிசிற் கவி,
அவாவிய கவியை அவாக் கெடக் கூறியமையின் இது பரிசிற் பொருளானந்தம்.

     யாப்பானந்தமாவது - முன்தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப்
பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ, அதன் பின்னே சிறப்புடை மொழி நிறீஇச்
சிறப்பிக்கப்படுவதனை இவ்வாறு இடர்ப்படப் பாடுவது.
  `ஊகத்தி னான்மல்கு சோலை உளியன் உயர்வரைவாய்
மேகத்தி னாலுமின் னாலு மிகவு மெலிந்துரைத்த
ஆகத்தி னேற்கரு ளாயென் பணியு மைவாயெயிற்றின்
நாகத்தி னான்மால் கடைந்திடப் பட்ட நளிகடலே'
 
     
என்பது எடுத்துக்காட்டு.

     தூக்கானந்தமாவது - கஞ்சத்தாளம் முதலிய கருவிகளோடும் இசைந்த இசைக்கீழ்ப்
பாடுதற்கண், அவன் பெயரைச் சார்த்தி உயரவும் இறுகவும் பெயர் பிளந்து பண்ணியும்,
ஒருவர்க்கும் பெயர் புலனாகாமையும் சொல்லுதல்.

     இலககியம் வந்தவழிக் காண்க.

     தொடையானந்தமாவது - அளபெடைத் தொடைப் பாட்டினுள் பாட்டுடைத்
தலைவன் பெயர் சார்த்தி அளபெடுப்பத்தொடுப்பது.