முகப்பு
தொடக்கம்
304
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
`இயற்பெயர் சார்த்தி எழுத்தளபு எழினே
இயற்பாடு இல்லா எழுத்தா னந்தம்.'
`இயற்பெயர் மருங்கின் மங்கலம் அழியத்
தொழிற்சொல் புணர்ப்பினது சொல்லா னந்தம்'.
`இறைச்சிப் பொருளை ஊறுபடக் கூறினும்
புகழ்ச்சிக் கிளவியின் பொருந்தா ஆயினும்
உவமைக் காட்சியின் ஊனம் தோன்றினும்
இவைஅல பிறவும் இன்னன வரினே
அவைஎன மொழிப பொருளா னந்தம்.'
`முதல்தொடை மருங்கின் மொழிநிறுத் தொருபெயர்
இடைப்படுத் தவ்வழி இடுஞ்சீர்ப் படினே
வாய்ப்ப நோக்கி வல்லோர் கூறிய
யாப்பா னந்தமென் றறிதல் வேண்டும்.'
`தாழா மரபினர் யாழொடு புணர்ந்த
பாவகை ஒருவனைப் பாடுங் காலைத்
தொல்வகை மரபின் அவன்பெயர் தோற்றி
ஏங்கினும் இடுங்கினும் எழுந்துபிரிந் திசைப்பினும்
தூங்கினும் குழறினும் தூக்கா னந்தம்'
`அளபெடை மருங்கின் பாடப் படுவோன்
பெயரொடு தொடுப்பின் பெற்றியின் வழுவாத்
தொடையா னந்தம் எனவே துணிக.'
`உருவி ஆகிய ஒருபெருங் கிழவனை
அருவி கூறுதல் ஆனந் தம்மே.'
`யாப்பினுள் எழுத்துச் சொற்பொருள் யாப்பணிக்
குற்றமும் உவமைவகை குறிக்குமா னந்தமும்
வாரா துரைப்பது வழுவில ஆகும்.'
`எழுத்துக் குற்றம் எழுத்திலக் கணத்தில்
வழுத்திய முறையின் மாறு பட்டு
வருவ தாமென வழுத்தப் படுமே.'
- 43
மேல்