| `ஏனைய குற்றமும் இவற்றோ ரற்றே.' | | | - 44 | | |
| `ஆனந்தம் ஐவகை அறையுங் காலை எழுத்தினிலை பிறழ்ந்தன எழுத்தா னந்தம்.' | | | - 45 | | |
| `சொல்லா னந்தம் சொல்நிலை பிறழ்ந்தன.' | | | - 46 | | |
| `பொருள்நிலை பிறழ்வன பொருளா னந்தம்.' | | | - 47 | | |
| `யாப்பின்நிலை பிறழ்வன யாப்பா னந்தம்.' | | | - 48 | | |
| `அணிநிலை பிறழ்ந்து வருவன அணியா னந்த மாமென நவிலப் படுமே.' | | | - 49 | | |
50 |
அடிவரையறை இல்லாச் செய்யுள்வகை |
760. | ஓரடி யானும் பலஅடி யானும் ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள்; அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகும் என்ப அறிந்திசி னோரே. | | | | | |
இஃது அடி இன்றியும், ஓரடியானும் நடைபெறும் செய்யுட்களும் உள என்பதூஉம் அவை இவை என்பதூஉம் கூறுகின்றது. இதற்குப் பொருள் உரைத்திலம், சூத்திரத்தானே பொருள் விளங்கலின். பிசி - பொய்; அங்கதம் - வசை; இவற்றிற்கு உதாரணம் வந்துழிக் காண்க. |
(51) |
நான்காவது செய்யுளியல் முற்றும். |