இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் நான்காவது செய்யுளியல் |
செய்யுளும் அதன் வகையும் |
710. | செய்யுள் என்பது தெரிவுஉறக் கிளப்பின் முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி எழுத்துஅசை சீர்தளை அடிதொடை என்ற மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் பாவும் இனமும் எனஇரு பாற்றே. | | | | | |
என்பது சூத்திரம். இவ்வோத்துச் செய்யுளது இயல்பு உணர்த்திற்று ஆகலான் செய்யுள் இயல் என்னும் பெயர்த்து. மேல் நிறுத்த முறையானே அகத்திணை இயலும் புறத்திணை இயலும் அணி இயலும் உணர்த்தி, அங்ஙனம் உணர்த்திய பொருண்மை எல்லாவற்றிற்கும் இஃது இடம் ஆதல் பற்றி அவற்றின் பின் கூறினமையான், மேல் ஓத்தினொடு இயைபு உடைத்து ஆயிற்று. இதனுள் இத்தலைச் சூத்திரம் செய்யுட்குப் பொது விதியும் அஃது இத்துணை உறுப்பிற்றாய் இத்துணைத்தாம் என்பதூஉம் கூறுகின்றது. |
|
(இ-ள்.) மேல் அகத்திணை ஓத்தினுள் `செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே (இ. வி. பொ. 2) எனத் |