இ-ள் : குறள் அடியும் சிந்தடியும் அளவடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் என முற்கூறிய அடி ஐந்து வகைப்படும் என்றவாறு. |
| (10) |
விளக்கம் |
| நிறுத்தமுறை - முதல் நூற்பா. | | | | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `குறள்சிந்து அளவு நெடில்கழி நெடிலென்று ஐவகை மரபின அடிவகை தாமே.' | | | - காக்கை | | |
| `தடுத்தன தட்டத் தளைபல தழுவியும் அடுத்த சீரின் அடியெனப் படுமே.' | | | | | |
| `குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே.' | | | - யா. வி. 23 | | |
| `அடியென்ப தளைத்த அம்சீராம் நடை; அவை குறளடி இருசீர் சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி கழிநெடி லடிஐந்தே கடந்தசீர் இவற்றுள் எண்சீர் மிக்கடி எனின்சிறப்பு அன்றே.' | | | - தொ. வி. 211 | 10 | |
ஐவகை அடிகளின் சீர்கள் |
720. | குறள்ஒரு பந்தம், இருதளை சிந்தாம், முத்தளை அளவடி, நால்தளை நெடில்அடி, ஐந்தளை முதலா எழுதளை காறும் வந்தவும் பிறவும் கழிநெடில், என்ப. | | | | | |
இது முற்கூறிய அடிகள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : ஒரு தளையான் வந்த அடியினைக் குறள் அடி என்றும், இரு தளையான் வந்த அடியினைச் சிந்தடி |
|