செய்யுளியல் - நூற்பா எண் 11

75

 

 

அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
     நீதி ஓதும் ஆதி ஆய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர்
     சோதி சேர்ந்த சித்தி தானே'
 
 

- யா. கா. 13 மே; சூளா. துற. 41

 
எனவும் வரும் பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. (11)

ஒத்த நூற்பாக்கள்

 

`இருசீர் குறளடி, சிந்தடி முச்சீர்,
அளவடி நாற்சீர், அறுசீர் அதனின்
இழிபு நெடிலடி, என்றிசி னோரே.'
 
 

- காக்கை

 

 

`நாற்சீர் கொண்டது நேரடி யாமென்ப;
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப.'
 
 

- நற்றத்தம்

 

நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே.'
 

- தொ. பொ. 344

 

`அடியுள் ளனவே தளையொடு தொடையே.'
 

- தொ. பொ. 345

 

`அடியிறந்து வருதல் இல்லென மொழிப.'
 

- தொ. பொ. 346

 

 

`குறளடி, சிந்தடி, இருசீர், முச்சீர்;
அளவடி, நெடிலடி, நாற்சீர்; ஐஞ்சீர்;
நிரல்நிரை வகையான் நிறுத்தனர் கொளலே.'
 
 

- யா. வி. 24

 

 

`கழிநெடில் அடியே கசடறக் கிளப்பின,
அறுசீர் முதலா ஐயிரண்டு ஈறா
வருவன பிறவும் வகுத்தனர் கொளலே.'
 
 

- யா. வி. 25

 

 

`குறளிரு சீரடி, சிந்துமுச் சீரடி, நாலொருசீர்
அறைதரு காலை அளவொடு, நேரடி; ஐயொருசீர்
நிறைதரு பாதம் நெடிலடி யாம் ; நெடு மென்பணைத்தோள்
கறைகெழு வேற்கணல் லாய் ! மிக்க பாதம், கழிநெடிலே.'
 
 

 - யா. கா. 12

 

 

`திரைத்த, இருது, குறள், சிந்து; அளவடி தேம்பழுத்து,
விரிக்கு நெடிலடி, வேனெடுங் கண்ணி! வென்றான் வினையின்,
இரைக்குங், கணிகொண்ட, மூவடி வோ, டிடங், கொங்கு, மற்றும்
கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர்! கழிநெடிலே.'
 
 

 - யா. கா. 13