அளவடியான் வந்த ஆசிரியப் பாவிற்குச் செய்யுள் : |
| `செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே | | | - யா. கா. 23 மே; குறுந். 1 | | |
அளவடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்எனப் பிரிவுஎண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர் வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேள்இனி.' | | | [இது தரவு] | | |
| `அடிதாங்கும் அளவன்றி அனல்அன்ன வெம்மையால் கடியவே கனங்குழாய் காடுஎன்றார், அக்காட்டுள், துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடிஊட்டிப் பின்உண்ணுங்ங் களிறுஎனவும் உரைத்தனரே.' | | | | | |
| `இன்பத்தின் இகந்துஒரீஇ, இலைதீய்ந்த உலவையான், துன்புறூஉம் தகையவே காடுஎன்றார், அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ரால்ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே.' | | | | | |
| `கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான், துன்னரூஉம் தகையவே காடுஎன்றார், அக்காட்டுள் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை, எனவும் உரைத்தனரே' | | | [இவை மூன்றும் தாழிசை] | | |
|
| `இனைநலம் உடைய கானகம் சென்றோர், புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் | | | | | |