| பல்லியும் பாங்குஒத்து இசைத்தன; நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.ழு (சுரிதகம்) | | | - யா. கா. 23 மே. கலி. 11 | | |
எனவும், |
குறள் அடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : |
| `சுறமறிவன துறைஎல்லாம் இறஈன்பன இல்எல்லாம் மீன்திரிவன கிடங்குஎல்லாம் தேன்தாழ்வன பொழில்எல்லாம் என ஆங்கு, தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே.ழு | | | - யா. கா. 23 மே. | | |
எனவும், |
சிந்தடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : |
| `தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலம்தொலையப் பரிவெய்தி, என்நலத்தகை இதுஎன்னென எழில்காட்டிச் சொல்நலத்தகைப் பொருள்கருத்தி னில்சிறந்தாங்கு எனப் பெரிதும் கலங்குஅஞர் எய்தி விடுப்பவும், சிலம்பிடைச் செலவும், சேண்நிவந் தற்றே.ழு | | | - யா. கா. 23 மே. | | |
எனவும் வரும். எல்லா அடியானும் வந்த பா இனங்களுக்குச் செய்யுள் `திரைத்த சாலிகைழு முதலியவாக முற்காட்டியவே கொள்க. (பக். 72) பிறவும் அன்ன. `ஒண்பாழு என்ற மிகையானே வெண்பாவின் ஈற்று அடியும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்று அயல் அடியும், கலிவெண்பாவின் ஈற்று அடியும் சிந்தடியாயும், இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடைஅடி குறள் அடியாயும் சிந்து அடியாயும் வரப்பெறும் எனக் கொள்க. |
|
| (12) |