விளக்கம் |
மேற்கூறிய என்றது சென்ற நூற்பாவினை. |
|
ஒத்த நூற்பாக்கள் |
| `வஞ்சி அடியே இருசீர்த்து ஆகும்.' | | | - தொ. பொ. 357 | | |
| `முச்சீ ரானும் வரும்இடன் உடைத்தே.' | | | - தொ. பொ. 358 | | |
| `ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின் தோற்றம் முச்சீர்த்து ஆகும் என்ப.' | | | - தொ. பொ. 380 | | |
| `இடையும் வரையார் தொடைஉணர் வோரே.' | | | - தொ. பொ. 381 | | |
| `வெண்பா ஈற்றடி முச்சீர்த்து ஆகும்.' | | | - தொ. பொ. 384 | | |
| `இருசீர் அடியும் முச்சீர் அடியும் வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே.' | | | - மயேச்சுரம் | | |
| `ஆசிரியம் வெண்பாக் கலியோடு மும்மையும் நாற்சீர் அடியான் நடைபெற் றனவே.' | | | - காக்கை. | | |
| `சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி உண்டென் றறைப உணர்ந்திசி னோரே.' | | | - காக்கை. | | |
| `வஞ்சி-அல்லாப் பாவினுள் அடிவகை தெரியின் எல்லாம் நாற்சீர், அல்லடி யியலா, இறுதியும் அயலும் இடையும் முச்சீர் பெறுதியும் வரையார் வெள்ளைமுதல் மூன்றும்.' | | | - மயேச்சுரம் | | |
| `இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்; நாற்சீர் அடியான் பாப்பிற மூன்றே.' | | | - அவிநயம் | | |
| `ஆசிரி யப்பா வெண்பாக் கலியென்று மூவகைப் பாவும் நேரடிக்கு உரிய.' | | | - நத்தத்தம் | | |
| `வஞ்சி அல்லா மூவகைப் பாவும் எஞ்சுதல் இலவே நாற்சீர் அடிவகை.' | | | - சிறுகாக்கை | | |