செய்யுளியல் - நூற்பா எண் 14 | 83 | | தொடை, தொடைவகை - இலக்கணம் | | 723. | முதல்எழுத்து ஒன்றின் மோனையும், ஏனை இரண்டாம் எழுத்தோடு இயையின் எதுகையும், மொழியினும் பொருளினும் முரணின் முரணும், இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையும், அளபுஎடுத்து ஒன்றின் அடிஅள பெடையும், இருசீர் மிசைவரத் தொடுப்பின் இணையும், முதலொடு மூன்றாம் சீர்த்தொடை பொழிப்பும், சீர்இரண்டு இடைவிடத் தொடுப்பின் ஒரூஉவும், மூஒரு சீரும் முதல்வரத் தொடுப்பின் கூழையும் முதல்அயல் சீர்ஒழித்து அல்லன மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும் ஈற்றுஅயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பின் கீழ்க்கது வாயும் கிளந்த ஈர்இரண்டு சீர்தொறும் தொடுப்பின் முற்றும் ஆகும். | | | | | | இது முற்கூறிய தொடையும் தொடை விகற்பமும் ஆமாறு கூறுகின்றது. இ - ள் : அடிதொறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பின் அடி மோனைத் தொடையும், அடிதொறும் ஒழிந்த இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பின் அடிஎதுகைத் தொடையும், மொழியானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பின் அடிமுரண் தொடையும், அடிதொறும் ஈற்று எழுத்து ஒன்றிவரத் தொடுப்பின் அடிஇயைபுத் தொடையும், அடிதொறும் அளபு எடுத்து ஒன்றிவரத் தொடுப்பின் அடி அளபெடைத் தொடையும், முதல் இருசீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்தொடுப்பின் இணைத் தொடையும், முதல் சீர்க்கண்ணும் | |
|
|
|