அடிமோனைத் தொடைக்குச் செய்யுள் : |
85 |
. | `மாவும் புள்ளும் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப மாலை தொடுத்த கோதையும் கமழ மாலை வந்த வாடையின் மாயோள் இன்உயிர் புறத்துஇறுத் தற்றே' | | | - யா. கா. 18 மே. | | |
எனவும், |
|
அடி எதுகைத் தொடைக்குச் செய்யுள் : |
. | `வடியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார் கடியார் கனங்குழாய்! காணார்கொல்? காட்டுள் இடியின் முழக்கஞ்சி, ஈர்ங்கவுள் வேழம் பிடியின் புறத்தசைத்த கை' | | | - யா. கா. 18 மே. | | |
எனவும், |
பொருள் சொல் முரண் தொடைக்குச் செய்யுள்: |
. | `இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின் நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும் சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே' | | | - யா, கா, 18 மே. | | |
எனவும், |
[சிறு - பெரு என்பன சொல்முரண்] |
அடி அளபெடைத் தொடைக்குச் செய்யுள் : |
. | `ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோடு ஈஇர் இரைகொண்டு ஈர்அளைப் பள்ளியுள், தூஉம் திரைஅலைப்பத் துஞ்சாது, இறைவன்தோள் மேஎ வலைப்பட்ட நம்போல், நறுநுதால்! ஓஒ உழக்கும் துயர்' | | | - யா. கா. 18 மே. | | |
எனவும், |