`அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி | - | இணை |
அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி | - | பொழிப்பு |
அம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி | - | ஒரூஉ |
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் | - | கூழை |
அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள் | - | மேற்கதுவாய் |
அவிர்மதி அனைய திருநுதல் அரிவை | - | கீழ்க்கதுவாய் |
அயில்வேல் அனுக்கி அம்புஅலைத்து அமர்ந்த | - | முற்று |
கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என் | | |
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே' | - | யா. கா. 20 மே. |