88

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இரும்பும் பொன்னும் மாறுபாடு உடைமையின் பொருள் முரண் ஆயிற்று எனவும்
குடியும் கண்ணும் ஆகாது சிறுமை பெருமை என்னும் சொல்லே மாறுகோடலின்
சொல்முரண் ஆயிற்று எனவும் கொள்க.

(14)

விளக்கம்

அளபெடை விகற்பத்துக்குச் சிதம்பரச் செய்யுட் கோவைச் செய்யுள் :

 

`பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
கோஒ டரங்கள் முசுவொடும் வெரீஇக்
காஅல் தழீஇக் கவிழ்ந்ந் தொடுங்கச்
சூஉல் முதிர்ந்து காஅல் வீஇழ்
வாஅன் தாஅழ் மழைப்பெயல் தலைஇத்
தேஎன் தாஅழ் பூஉங் காஅ
வளங்ங் கனிந்த மணிமன்றுள்
விளங்ங் கொளியை உளங்கொளல் தவமே.ழு
 
 

 - சி. செ. கோ. 42

 

ஒத்த நூற்பாக்கள்

     `அடிதொறும் தலைஎழுத்து ஒப்பதுமோனை.ழு - தொ. பொ. 404
     `அஃதொழித்து ஒன்றின் எதுகை ஆகும்.ழு - தொ. பொ. 405
     `ஆயிரு தொடைக்கும் கிளைஎழுத்து உரிய.ழு - தொ. பொ. 406
     `மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.ழு - தொ. பொ. 407
     `இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.ழு - தொ. பொ. 408
     `அளபெழின் அவையே அளபெடைத் தொடையே.ழு - தொ. பொ. 409
     `ஒருசீர் இடையிட்டு எதுகை யாயின்    
     பொழிப்புஎன மொழிதல் புலவர் ஆறே.ழு - தொ. பொ. 410
     `இருசீர் இடையிடின் ஒரூஉஎன மொழிப.ழு - தொ. பொ. 411