90

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     `அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை.' - அவிநயம்
     `சொல்லிசை அளபெழ நிற்பது அளபெடை.' - சிறுகாக்கை
     `அளபெழுந்து யாப்பின்அஃது அளபெடைத் தொடையே.' - மயேச்சுரம்
     `இரண்டாம் சீர்வரின் இணைஎனப் படுமே.'    
     `இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே.' - யா. வி. 42
     `முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.' - யா. வி. 43
     `ஒரூஉத்தொடை,    
               இருசீர் இடைவிடின் என்மனார் புலவர்.' - அவிநயம்
     `சீர்இரண்டு இடைவிடத் தொடுப்பது ஒரூஉத்தொடை.' - யா. வி. 44
     `மூன்றுவரின் கூழை, நான்குவரின் முற்றே.'    
     `மூவொருசீரும் முதல்வரத் தொடுப்பது    
     கூழை என்மனார் குறியுணர்ந் தோரே.' - யா. வி. 45
     `முதல்அயல் சீர்ஒழித்து அல்லன மூன்றின்    
     மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே.' - யா. வி. 46
     `ஈற்றுஅயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது    
     கீழ்க்கது வாயின் கிழமையது ஆகும், - யா. வி. 47
     `சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே.' - யா. வி. 48
அவை தாம்,    
     `முதலோடு அயல்கொள்வது இணை, அயல் இன்றி
     மூன்றாம் சீரது பொழிப்பு, இரண்டு இடைவிட்டு
     இறுதியொடு கொள்வது ஒரூஉ, இறுதிச்
     சீர்ஒழித்து ஏனைய ஒன்றின் கூழை,
     முதல்ஈறு அடைந்தவற்று இன்மை இருவகைக்
     கதுவாய், முற்றும் நிகழ்வது முற்றே,
   
     முதலோடெட்டு ஆகும், என்மனார் புலவர்.' - பரிமாணம்