92

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`தொடை என்பது ஈரடி தொடுப்பதாம்; அவை
அடை முதல் மோனை, அந்தம் இயைபே,
இடையே எதுகை, எதிர்மொழி முரண், அள
பெடையே அளபாம், எனஐ வகையே.'
 
 

- தொ. வி. 212

 

 

`எதுகை என்பது இயைவன மொழிக்கண்
முதலெழுத்து அளவொத்து முதலொழித்து ஒன்றுதல்.'
 
 

- தொ. வி. 213

 

 

`மூன்றாம்எழுத்து ஒன்றுதல் ஆசுஇனம் தலையாகு
இடைகடை ஆறும் எதுகை வகையே.'
 
 

- தொ. வி. 214

 

 

`மோனை முதலடி முதல்வரின் அடியே,
இணைவது இணையே, இடைவிடல் பொழிப்பே,
இறுவது ஒரூஉ, ஈறுஒன்று ஒழிவது
கூழை, முதல்அயல் குன்றல் மேற் கதுவாய்,
ஈற்றயல்ஒன்று ஒன்றா தெனின்கீழ்க் கதுவாய்,
எல்லாம் ஒன்றுவது எனின்முற்று என்ப.'
 
 

- தொ. வி. 216

 

 

`அடிஇணை பொழிப்புஒரூஉக் கூழை மேல்கீழ்க்
கதுவாய் முற்றுஎன எட்டொடும் மோனை
இயைபே எதுகை முரணே அளபே
எனஐந்து உறழ எண்ணைந்து ஆகி
அடிஅந் தாதி இரட்டைச் செந்தொடை
எனஇம் மூன்றும் இயையத் தொடையும்
விகற்பமும் எண்ணைந்து ஒருமூன்று என்ப.'
 
 

 - தொ. வி. 218

 

 

`அடிதொறும் முதலெழுத்து அணைந்து வரல்அடி
மோனை என்மனார் முழுதுணர்ந் தோரே.'
 
 

- மு. வீ. யா. 24

 

 

`இறுதி அசைஎழுத் தேனும் ஒன்றுவது
அடிஇயைபு ஆம்என அறையப் படும்.'
 
 

- மு. வீ. யா. 25

 

 

`இரண்டாம் எழுத்தொன் றுவதெது கையே.'  
 

- மு. வீ. யா. 26

 

 

`முரணத் தொடுப்பது முரண்தொடை ஆகும்.'  
 

- மு. வீ. யா. 27

 

 

`அளபெடுத்து ஒன்றுவது அளபெடைத் தொடையே.'  
 

- மு. வீ. யா. 28