| | `இணைஇரு சீர்மிசை எய்துவ தாகும்.' | | | | - மு. வீ. யா. 32 | | |
| | `பொழிப்பு இடையிட்டுப் போதுவ தாகும்.' | | | | - மு. வீ. யா. 33 | | |
| | `இருசீர் இடையிட்டு ஆதியும் அந்தமும் ஒன்றின் ஒரூஉஎன்று உணர்ந்திசி னோரே.' | | | | - மு. வீ. யா. 34 | | |
| | `இறுதிச் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது கூழை என்மனார் குறிஉணர்ந் தோரே.' | | | | - மு. வீ. யா. 35 | | |
| | `முதல்அயல் சீர்ஒழித்து ஏனைய சீர்எலாம் இயைத் தொடுப்பது மேற்கது வாயே.' | | | | - மு. வீ. யா. 36 | | |
| | ஈற்றயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.' | | | | - மு. வீ. யா. 37 | | |
| | `முழுவதும் இயைவது முற்றெனப் படுமே.' | | | | - மு. வீ. யா. 38 | | |
| விகற்பமிலாத் தொடைகள் |
| 724. | செந்தொடை இரட்டையோடு அந்தாதி எனவும் வந்த வகையான் வழங்கவும் பெறுமே. | | | | | | |
இஃது இவ்வகையானும் தொடையாம் என்கின்றது. இ - ள் : செந்தொடை எனவும் இரட்டைத் தொடை எனவும் அந்தாதித் தொடை எனவும் வந்த கூற்றால் நடக்கவும் பெறும், முற்கூறிய தொடை என்றவாறு, |
| (15) |
| விளக்கம் |
| இத்தொடைகளுக்கு இணை பொழிப்பு முதலிய விகற்பம் இல்லை என்பது கொள்க. |
| ஒத்த நூற்பாக்கள் |
| | `பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே | | | | - தொ. பொ. 402 | | |
| |