94

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`நிரல்நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்
மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப.ழு
 
 

- தொ. பொ. 403

 

 

`சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல்லியல் புலவர்அது செந்தொடை என்ப.ழு
 
 

- தொ. பொ. 412

 

 

`மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீ ராயிரத்து ஆறைஞ் நூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே.ழு
 
 

- தொ. பொ. 413

15

செந்தொடை - முதலியவற்று இலக்ணம்
 

725.

சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல்லி நிறுத்தசெந் தொடையும், நேர் அடியின்
முழுவதும் ஒருசொல் வரின்அஃது இரட்டையும்,
அடியும் சீரும் அசையும் எழுத்தும்
முடிவு முதலாச் செய்யுள் மொழியின்
அந்தாதித் தொடையும், என்று அறிதல் வேண்டும்.
 
     
     இது செந்தொடை முதலிய மூன்றும் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : முற்கூறிய தொடைகளோடு வேறுபட்டு நடப்பின் மேல் கூறிப்போந்த
செந்தொடையும், நாற்சீர் ஓர் அடியின் முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பின்
அஃது இரட்டைத் தொடையும், அடியும் சீரும் அசையும் எழுத்தும் ஆகிய இறுதி
மற்றை அடிக்கு ஆதியாகச் செய்யுள் செய்யின் அந்தாதித் தொடையும் என்று அறிதலை
விரும்பும் ஆசிரியன் என்றவாறு.