96

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த
தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த
பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்துழு
 

 - சி. செ. கோ. 27

என்பதனை அந்தாதித் தொடைக்கும் சிதம்பரச் செய்யுட் கோவையிலிருந்து
எடுத்துக்காட்டாகக் கொள்க.

 

`அறனன்று மாதவன் என்ப(து) உலகெந்தை
தாள்காணார் நாணுக் கொளழு
 

- சி. செ. கோ. 2

என்பது அந்நூலில் செந்தொடைக்கு உதாரணமாகும்.

ஒத்த நூற்பாக்கள்

 

`ஒன்றிய தொடையொடும் விகற்பம் தன்னொடும்
ஒன்றாது கிடப்பது, செந்தொடை யாப்பே.ழு
 

- சிறுகாக்கை

 

`அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே.ழு
 

- பல்காயம்

 

`ஒன்றா தாவது செந்தொடைக் கியல்பே.ழு
 

- நத்தத்தம்

 

`செம்பகை இல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்.ழு
 

 - காக்கை

 

`மாறலது ஒவ்வா மரபின செந்தொடை.ழு
 

 - அவிநயம்

 

`செந்தொடை ஒவ்வாத் திறத்தன ஆகும்.ழு
 

- யா. வி. 50

 

`முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும்.ழு
 

- பல்காயம்

 

`சீர்முழுது ஒன்றின் இரட்டை ஆகும்.ழு
 

 - நத்தத்தம்

 

`ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை.ழு
 

- அவிநயம்

 

`ஒருசீர் அடிமுழுதும் வருவது இரட்டை.ழு
 

- மயேச்சுரம்

 

`அடிமுழு தொருசீர் வரின்அஃது இரட்டை.ழு
 

- பரிமாணம்

 

`இரட்டை அடிமுழுது ஒருசீர் இயற்றே.ழு
 

 - யா. வி. 51