செய்யுளியல் - நூற்பா எண் 16, 17

97

 

 

`அடியும் சீரும் அசையும் எழுத்தும்,
முடிவு முதலாச் செய்யுள் மொழியின் அஃது
அந்தாதித் தொடையென்று அறிதல் வேண்டும்.'

`அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை
முந்தா இசைப்பின் அஃது அந்தாதித் தொடையே.'
`ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதி என்று
ஓதினார் மாதோ உணர்ந்திசி னோரே.'
 
 

- யா. வி. 52

 

 

`அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி; அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை; வரன் முறையான்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்,
செந்தொடை நாமம் பெறும்; நறுமென்குழல் தேமொழியே.'
 
 

- யா. கா. 17

 

 

`ஓவில் அந்தாதி உலகுடனாம், ஒக்குமே இரட்டை,
பாவருஞ் செந்தொடை பூத்த என்றாகும், பணிமொழியே.'
 
 

 - யா. கா. 18

 

 

`அந்தாதி அடிக்கடை ஆதி ஆதல்;
இரட்டை முழுதுஓர் இறை அடுக் கியவடி;
செந்தொடை தொடை ஒன்றும் சேரா அடியே.'
 
 

- தொ. வி. 217

 

 

`அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி.'  
 

 - மு. வீ. 29

 

 

`ஓரடி முழுதும் ஒருசொல் லேவரத்
தொடுப்பது இரட்டைத் தொடைஎனப் படுமே.'
 
 

 - மு. வீ. 30

 

 

`ஓரடி முழுதும் ஒருசொல் லேவரத்
தொடுப்பது இரட்டைத் தொடைஎனப் படுமே.'
 
 

- மு. வீ. 31

 

பாவகை

726.

வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப்
பண்புஆய்ந்து உரைத்த பாநான்கு ஆகும்.
 
     
இது நிறுத்த முறையானே முற்கூறிய பாவகை இத்துணைத்து என்கின்றது.