98

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     இ - ள் : வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எனத்
தத்தம் தன்மையான் தெரிந்து சொல்லப்பட்ட பா நான்கு வகைப்படும் என்றவாறு.

17

விளக்கம்

     தொடக்கத்தில் வெண்பாவும் ஆசிரியமுமே தோன்றின; பின் வெண்பா
நடைத்தாகிய கலியும் ஆசிரியநடைத்தாகிய வஞ்சியும் தோன்றப் பாக்கள் நான்காயின
என்பர் தொல்காப்பியனார்.

     நிறுத்த முறை - முதல் நூற்பா.

     பா என்பது சேட்புலத்து ஒருவன் எழுத்தும் சொல்லும் புலனாகாத வகையில்
பாடம் ஓதுங்கால் அவன் ஓதுகின்றதனை இன்னது என விகற்பித்து உணர்தற்கு
ஏதுவாய பரந்துபட்டுச் செல்லுவதோர் ஓசைத் தொகுதி ஆகவே ஓசைபற்றிப் பாக்கள்
வரையறுக்கப்பட்டன.

ஒத்த நூற்பாக்கள்

 

`பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.'
 
 

- தொல். பொ. 419

 
 

 

`ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலிஎன மொழிப.'
 
 

- தொல். பொ. 420

 

`ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற்று என்ப பாவகை விரியே.'
 
 

- தொல். பொ. 417

 

 

`செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின்
பாவே பாவினம் எனஇரண்டு ஆகும்.'
 
 

யா. வி. 54