சுவாமிநாதம்10நூல் வழி
 

செல்லச் சொல்லும் பொருளும் தேய்ந்து முடிதல் 8. புனருத்தம் 9. சொல்லத்
தொடங்கிய பொருளை விட்டு விட்டு இடையிலே மற்றொரு பொருளை
விரித்தல், 10. பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைச் சேர்த்தல்
ஆகிய பத்தும்குற்றங்களாகும்.

     1. சுருங்கச் சொல்லுதல், 2. விளக்கி வைத்தல் 3. உதாரணமாகப்
பயன்படுதல் 4. சந்த இன்பம் 5. சிறப்பாகிய பொருளைத் தருதல் (விழுமியது
பயத்தல்) 6. நல்ல சொற்களைச் சேர்த்தல், 7. இனிமை பயத்தல், 8.
முறைப்படி வைத்தல், 9. ஆழமுடைமை 10. உயர்ந்தோர் வழக்கோடு
மயங்காமை ஆகிய பத்தும் குணங்களாகும்.

     ‘புனருத்தம்’ என்பது மீண்டும் கூறல், நன்னூலோடு ஒப்பிட்டுப்
பார்க்கும்போது ‘கூறியது கூறல்’ எனக் கூறலாம்.

     விளக்கம் : இது நன்னூல் 11, 10, 12, 13 ஆகிய சூத்திரங்களின்
வரிசையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

10. மேலைநுதலிப் புகுதல்,தொகுத் தல்,பகுத்து ணர்த்தல்,
     விகற்பத்தின் முடித்திடல் உய்த் துணர்தல், மாட் டெறிதல்,
நூலின் முறை வைப்பு,ஏதுக் காட்டல்,தா னெடுத்து
     நுவறல், முடித் துக்காட் டல்,முடிவிடங் கூறுதலே
சாலெடுத்துக் காட்டுஎடுத்த மொழியின்எய்த வைத்தல்,
     தன்குறிமிக் கெடுத்துரைத்தல், எஞ்சுசொல்லின் விரித்தல்
ஏழுமொரு தலைதுணிதல், உரைத்தும்என்றல், உரைத்தாம்
     என்றல்,பிறர் நூன்முடிவு தான்உடன்பா டுறலே.      (9)

இந்தச் சூத்திரமும் அடுத்த சூத்திரமும் உத்திகளின் வகைகளைக்
கூறுகின்றன.

     உரை : 1. நுதலிப் புகுதல் (இது செய்தால் இப்படி ஆகும் என்று
கருதிப் புகுதல்) 2. தொகுத்தல் (பலவற்றையும்