சுவாமிநாதம்11நூல் வழி
 

திரட்டிக்காட்டுதல்) 3. பகுத்து உணர்தல் (திரட்டிக் கூறியவைகளை
வெவ்வேறாகக் கூறுபடுத்திக் கூறுதல், 4. விகற்பத்தின் முடித்திடல்
(வெவ்வேறாக முடித்தல்) 5. உய்த்துணர்தல் (சில கருத்துக்களை நாமே
உணர்ந்து கொள்ளும் படியாக ஒருபொருளை வைத்தல்) 6. மாட்டெறிதல்
(ஒன்றுக்குச் சொல்லப்பட்ட இலக்கணத்தை மற்றொன்றுக்கும் பொருந்தும்
என்று கூறுதல்) 7. நூலின் முறைவைப்பு (நூலின் உட்பிரிவுகளைக் காரண
காரிய முறைப்படிவைத்தல்) 8. ஏதுக்காட்டல் (முன் காரணம் விளக்கப்பெறாத
ஒன்றைப் பின்காரணத்தான் முடிவுசெய்தல்) 9. தான்எடுத்து நுவறல்
(முன்னோரால் இயற்றப்பட்ட சூத்திரங்களைத் தான் சிற்சில இடங்களில்
எடுத்துச் சொல்லுதல்) 10. முடித்துக்காட்டல் (மேலோர் முடித்தவாறு
முடித்துக்காட்டுதல்) 11. முடிவு இடங் கூறுதல் (தான் கூறும் இலக்கணத்திற்
குரிய இலக்கியத்தை எடுத்துக் கூறுதல்) 12. தான் எடுத்துக் காட்டு (தான்
சொல்லும் இலக்கியத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல்) 13.
எடுத்த மொழியின் எய்தவைத்தல் (தான் சொன்ன இலக்கணத்தைத் தன்
இலக்கணத்திலேயே பொருந்த வைத்தல்) 14. தன்குறிமிக்கு எடுத்துரைத்தல்
(தான் புதிதாகப் பயன் படுத்திய குறியை (கலைச்சொல்லை)ப் பலஇடங்களிலும்
எடுத்துச் சொல்லுதல்) 15. எஞ்சு சொல்லின் விரித்தல் (சொல்லாது
விடப்பட்டவைக்குச் சொல்லப்பட்டதனால் இலக்கணம் பொருந்தச்
சொல்லுதல்) 16. ஒருதலை துணிதல் (இருவர் மாறுபட்ட கருத்துக்களைக்
கூறும்போது ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளுதல்) 17. உரைத்தும் என்றல்
(பின்னால் சொல்லவேண்டியதனை ஒரு காரணத்திற்காக முன்னால்
சுருக்கமாகச் சொல்லுதல்) 18. உரைத்தாம் என்றல் (முன்னால் சொன்ன
கருத்தைப் பின்னால் சொல்லவேண்டியிருந்தால் முன்னால் சொல்லப்பட்டது
என்று கூறுதல்) 19. பிறர் நூல் முடிவுதான் உடன் படுதல் (பிறர்நூலில்
கூறப்பட்ட முடிவைத் தானும் ஒத்துக்கொள்ளுதல்).