இச்சூத்திரம் நன்னூல் சூத்திரம் 323, 324 ஆகிய இரண்டையும் தழுவியது. பாட விளக்கம் : தருதொழினலின் (முதல் வரி) என்பது மூலபாடம். 50. |
அன்,ஆன் ஈறு ஆண்; அள்,ஆள் பெண்; அர்,ஆர்,பம்,மார் ஆம் பலர்;து டு,று ஒன்று; அ,ஆ பலபால், படர்க்கை பன் மூன்றாம், என்,அல்,அன், ஏன், கு,டு,து,று, செய்கு என்ப பகர் ஒருமைத் தன்மை; அம்,ஆம் எம்,ஏம்,ஓம், | |
உம்மைத், |
| |
தன்னொடாங்; க,ட,தற, செய்கும்மெனலாம் பன்மைத் தன்மையையாய் இம் மூன்றுஏவ லில்இருபான் மூன்று, பின்,ஏன்,அல், லால்,காண்,முன் னிலையொருமை இர்,ஈர் பெறும்;ஏவ லிலும்மின் முன்னிலைப் பல்லீறே. (4) | வினைமுற்றின் விகுதிகளைத் தொகுத்து உரைக்கின்றது. உரை : அன்,ஆன் ஈறுகள் ஆண்பாலையும் அள், ஆள் ஈறுகள் பெண்பாலையும் அர், ஆர், ப, மார் ஈறுகள் பலர்பாலையும் து, டு, று ஈறுகள் ஒன்றன்பாலையும் அ, ஆ ஈறுகள் பலவின் பாலையும் காட்டும் வகையில் 13 விகுதிகள் படர்க்கையிடத்து வரும். என், அல், அன், ஏன், கு, டு, து, று, ஈறுகள் பெற்று வரும் செய்கு வாய்பாடு தன்மை ஒருமையிலும், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஈறுகள் பெற்றுவரும். செய்கும் வாய்பாடு தன்மைப் பன்மையிலும் வரும். ஐ,ஆய்,இ ஆகிய மூன்று ஈறுகளும் ஏவலில் வரும். பதமரபில் கூறிய இருபத்து மூன்று ஈற்றுச் சொற்களும் ஏல், அல், ஆல், காண் ஆகிய ஈறுகளும் முன்னிலை ஒருமையிலும் இர், ஈர், ஆகிய ஈறுகளும் ஏவலோடு உம், மின் ஈறுகள் பெற்று முன்னிலைப் பன்மையிலும் வரும். விளக்கம் வந்தனன், வந்தான் - ஆண்பால் வந்தனள், வந்தாள் - பெண்பால் |