சுவாமிநாதம்111சொல்லதிகாரம்
வினையிலும் ‘வி’ விகுதிதனியாகவும் ‘பி’ விகுதி தனியாகவும் ஆக எட்டு
வகையாகப் பிறவினைவரும். பிறவினை தன்வினையாக வருதலும் உண்டு.
முதனிலை இல்லாமலும்தொழிற்பெயர் வரும். தொழிற்பெயர்
பெயரெச்சமாகவும் முற்றாகவும்பயன்படும். உண்டு, இன்மை, அன்மை, தகும்,
படும், வேண்டும், செயும்,யார், வேறு, எவன் ஆகிய குறிப்பு வினை
முற்றுகளும் அல், ஆல், உம்,மார், ஐ, க, ய, ர ஆகிய எட்டு விகுதியை
உடைய வியங்கோளும் எச்சமும்இருதிணைப் பொதுவினைகள்.
 
விளக்கம் :
 
ஊட்டு (உண்-தன் வினை) - முதனிலை திரிந்த பிறவினை
 
அரசன் கட்டின
கோட்டை
- அரசன் தச்சரால் கோட்டையைக் கட்டுவித்தான் என்ற வாக்கியத்தின் திரிந்த பெயரெச்சத்தொடர் ஆனதால் ‘கட்டின’ முதனிலை திரியாத பிறவினை.
 
நடத்துவிப்பி - முதனிலை திரிந்த பிறவினையோடு ‘விப்பி’ விகுதி
வரல்
 
நடப்பி - முதனிலை திரியா வினையோடு ‘பி’ விகுதி வரல்
 
நடத்துவி - முதனிலை திரிந்த பிற வினையோடு ‘வி’ விகுதி
வரல்
 
செய்வி - முதனிலை திரியாப் பிறவினையோடு ‘வி’ விகுதி
வரல்
 

ஊட்டுப்பி

- முதனிலை திரிந்த பிறவினையோடு ‘பி’ விகுதி
வரல்.