சுவாமிநாதம்124சொல்லதிகாரம்
 

5. பிரி (பிரிநிலை) : இவனோ கொண்டான் - இங்கு பலரிலிருந்து ஒருவனைப்
                 பிரித்துச் சுட்டுதலால் பிரிநிலை.

6. வினா:   குற்றியோ மகனோ - என்பது குற்றியா மகனா என
          வினாப்பொருளைத் தருவதால் வினா.

7. ஒழிவு (ஒழியிசை) : படிக்கவோ வந்தாய் - இங்கே படிப்பதற்கு வரவில்லை;
                  விளையாடுவதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
                  தருவதால் ஒழியிசை.

8. சிறப்பு : ஓஒ பெரியன் - இங்கு ஒருவனது பெருமையை விளக்குவதால்
          உயர்வு சிறப்பு என்றும்

     ஓஒ கொடியன் - இங்கு ஒருவனது கொடுமையை விளக்குவதால் இழிவு
                    சிறப்பு என்றும் பிரித்துப்பேசுவர்.

     எற்று: போகல். எற்று என் உடம்பின் எழில் நலம் - இங்கு என் நலம்
இழிந்தது என்று பொருள்படும்.

     என்று என தரும் பொருள்கள்:

1. குறிப்பு:  விண்ணென்று தெரிக்கிறது. விண்ணெனத் தெரிக்கிறது.

2. எண்:    நிலன் என்று நீர் என்று தீயென்று வளியென்று வான் என்று
          ஐந்து பூதங்கள். நிலன் என நீர்எனத் தீயென வளியென வான்
          என ஐந்து பூதங்கள்.

3. இசை:   ஒல்லென்று ஒலித்தது. ஒல்லென ஒலித்தது.

4. பண்பு:  வெள்ளென்று வெளுத்தது. வெள்ளென வெளுத்தது.

5. பெயர்:  பாரி என்று ஒரு அரசன். பாரியென ஒரு அரசன்.