சுவாமிநாதம்125சொல்லதிகாரம்
 

6. வினை:  வருவான் என்று கூறினேன். வருவான் எனக் கூறினேன்.

     ‘கொன்’ தரும் பொருள்கள்:

1. பயமிலி:  கொன்னே கழிந்தன்று இளமை (நாலடியார் 55.1) - இளமை பயம்
          இல்லாமல் கழிந்தது. எனவே இது பயம் இன்மை பொருள்.

2. காலம்:  கொன்வரல் வாடை-காதலர் நீங்கியகாலம் அறிந்து வருதலை
          உடைய வாடை என்ற பொருள் தருவதால் காலப் பொருள்.

3. பெருமை:  ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந் 138) பெரிய ஊர் தூங்கினாலும்’
            என்ற பொருள் தருவதால் பெருமைப் பொருள்.

4. பயன் இல்லாமை:  கொன்னே கழிந்தன்று இளமை - இளமை பயன்
                   இல்லாமல் கழிந்தது.

     ‘தில்’ தரும் பொருள்கள்:

1. ஒழிவு:  ‘வருகத்தில் அம்ம எஞ்சேரிசேர’ (அகம்.276.7) - வந்தால் ஒன்று
         செய்வேன் என்னும் ஒழிந்த சொற்பொருளைத் தருவதால் ஒழியிசை.

2. காலம்:  ‘பெற்றாங்கு, அறிகதில் அம்ம இவ்வூரே (குறுந்.14) -
          பெற்றகாலத்தை அறிக எனக் காலத்தை உணர்த்துவதால் காலம்.

3. விழைவு:  ‘அரிவையைப் பெறுகதில் அம்ம யானே’ (குறுந். 14)
           அரிவையைப் பெருதல் விருப்பத்தை உணர்த்துவதால் விழைவு.

மன்ற: - தேற்றம்: ‘மடவை மன்ற வாழிய முருக’ (நற். 34.11) - ‘திண்ணமாக
        நீ அறியாமையை உடையை - தெளிவுப்பொருள்.