சுவாமிநாதம்126சொல்லதிகாரம்
 

தஞ்சம்: எளிமை: ‘முரசு கெழுதாயத்து அரசே தஞ்சம் (புறம் 73 3) - அரசு கொடுத்தல் எளிது - எளிமைப் பொருள்.

     நன்னூலில் சொல்லப்படாத ‘எற்று’ ‘மன்ற’ தஞ்சம் போன்ற
இடைச்சொற்கள் இங்குக் கூறப்பட்டுள்ளதால் எல்லா இடைச்சொற்களும்
இலக்கண விளக்கத்தைப் பின்பற்றி [மன் (இ.வி.262); கொல் (இ.வி.269), மா
(இ.வி.275) ஓ (இ.வி.253), எற்று (இ.வி.263), என்று, என (இ.வி.255) கொன்
(இ.வி.265), தில் (இ.வி.264), மன்ற (இ.வி.270) தஞ்சம் (இ.வி.271)]
எழுதப்பட்டுள்ளதாகக் கூறலாம்

     பாட விளக்கம் : ‘பண்மிசை (3வதுவரி) என்று மூலப் பிரதியில்
இருந்தது ‘பண்பிசை’ என்று திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

56. கேள்வியசை அம்ம;வொடுத் தெய்யிசை யிலையாங்;
     கிளரும்அசை நிலை,அந்தில் ஆங்குஇடமு மாகு(ம்);
மாள,மியா மதி,இக,மோ, அத்தை,இத்தை, யாழ
     வாழிய,வீ யும்,சின்,பிற பிறக்கு,அ ரோப்,போ,
கோள்,இருந்திட்டு,அன்றாந் தந்,தான் என்னால் என்ப,
     குரை,ஓர் போல், யா,கா,மாது, இகுஞ் சின், முதலியவே
ஆளும் அசைநிலைகள்; இசைநிலையும் பேர்,வினையும்
     அளபுஇரக்கந், திரிபடுக்கும் குறிப்புமாய்ப் பணியே.   [3]

சில இடைச்சொற்களுக்குச் சிறப்பிலக்கணம் கூறுகின்றது.

     ‘அம்ம’ என்ற இடைச்சொல், 1. ஒருவனை ஒன்று கேள் என்ற
பொருளிலும், 2. அசைநிலைப் பொருளிலும் வரும். ‘ஒடு’ ‘தெய்ய’ ஆகிய
இரண்டும் இசைநிறைப் பொருளிலும்; ‘ஆங்கு’ என்பது அசைநிலைப்
பொருளிலும்; அந்தில் என்பது 1. அசைநிலையோடு 2. இடப்பொருளிலும்
வரும். மாள, மியா, மதி,இக, மோ, அத்தை, இத்தை, யாழ, வாழிய, ஈ, சின்,
பிற, பிறக்கு, அரோ, போ, கோள், இருந்து, இட்டு, அன்று, ஆம், தம், தான்,
என், ஆல், என்ப, குரை, போல், யா, கா, மாது, இகும்,சின் முதலியன
அசைநிலைகள். இவை இசை நிறைக்க பெயரோடும் வினையோடும் வரும்.