விளக்கம் : அம்ம: 1. ஏவல்-அம்ம வாழி தோழி (நற். 158.1) - தோழீ! வாழி! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக என்ற பொருள் தருவதால் ஏவல் பொருள். 2. அசைநிலை: ‘பயனின்று மன்று அம்ம காமம்’ (கலி.142.3) ஒடு: இசைநிறை-‘விதைக்குறு வட்டி போதொடு பொதுள, (குறுந். 155.1) தெய்ய: உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்’ (குறுந். 81.4) அந்தில்: 1. அசைநிலை: ‘அந்திற், கழலினன், கச்சி னன்’ (அகம். 76.6) 2. இடப்பொருள்: ‘வருமே சேயிழை அந்திற் கொழுநற் காணிய’ (குறுந். 293.7) தலைவி - கணவனைக்காண அந்த இடத்துக்கு வரும். ஆங்கு : ஆங்குத் திறனல்ல யாழ்கழற - அசைநிலை. மாள : சிறிது தவிர்ந்து ஈக மாளநின் பரிசிலர் உய்ம்மார். மியா : செழுந்தழையன் சென்மியா சென்று. மதி : சென்மதி பெரும. (அகம் 46. 16) இக : கண்பனி ஆன்றிக வென்றி தோழி. மோ : கண்டது மொழிமோ. (குறுந். 2.2) அத்தை : செலியர் அத்தை நின் வெகுளி. (புறம். 6) இத்தை : நீ ஒன்று பாடித்தை. (கலி 40. 10) யாழ : நீயே செய்வினை மருங்கிற் செலவு அயர்ந்தியாழ. (கலி.7) வாழிய : காணிய வாழி மலைச்சாரல். ஈ : சென்றீ பெரும. |