சுவாமிநாதம்132சொல்லதிகாரம்
 
     விளக்கம் : பெயர்ச் சொல்லும், கொண்டு முடியும் வினைச் சொல்லும்
திணை, பால், இடம், வழு ஏற்படாமல் பாதுகாத்தலாவது.

1. திணை வழு : அவன் வந்தது - உயர்திணைப்பெயரும் அஃறிணை
              வினையும்

2. பால் வழு  : அவன் வந்தாள் - ஆண்பால் பெயரும் பெண்பால் வினையும்

3. இடவழு   : நான் வந்தான் - தன்மைப் பெயரும், படர்க்கை வினையும்

4. காலவழு  : நேற்று வருவான்

5. வினாவழு : நடந்து வந்தவன் நொண்டியா?

6. விடைவழு : உண்டாயா என்ற வினாவிற்கு நாளைக்குப் போகிறேன் என்ற
             பதில்

7. மரபு வழு : மரவேலை செய்பவனைக் கொல்லன் என்பது

     குற்றியா மகனா என்ற திணை ஐயம் ஏற்பட்டால் குற்றியா மகனா
அங்கே தோன்றுகின்ற உருவம் என்று பொதுச் சொல்லான ‘உருவம்’
என்பது சேர்த்துச்சொல்ல வேண்டும். ஆண்மகனோ பெண்மகளோ என்று
பால் ஐயம் தோன்றிய போது ஆண்மகனோ பெண் மகளோ அங்கே
தோன்றுகின்றவர் என்ற பொது வினைமுற்றுச் சொல்லால் கூறவேண்டும்.

     ஐயம் ஏற்பட்டுத் தெளிந்தபோது குற்றி என்று தெரிந்து கொண்டால்
மகன் அன்று என்று கூறவேண்டும்.

     உயர்திணை எழுவாயைத் தொடர்ந்த அஃறிணைப் பொருள்கள் உயர்திணையோடு சேர்ந்து முடியும்போது உயர்திணை முடிபு பெறல்.

1. பொருள் : நம்பி பொன்     பெரியன்

2. இடம்   : நம்பி நாடு       பெரியன்