சுவாமிநாதம்133சொல்லதிகாரம்
 

3. காலம்  : நம்பி வாழ்நாள்    பெரியன்

4. சினை  : நம்பி மூக்குக்      கூரியன்

5. குணம்  : நம்பி குடிமை      நல்லன்

6. தொழில் : நம்பி நடை       கடியன்

     திணைபால் வழுவி வருதல்:

1. இழிவு        : ‘ஏவவும் செய்யலான், தான் தேறான்
                 அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்’      (குறள் 848)

                 இங்கு ‘தான் தேறான்’ என்ற உயர்திணை இழிவு
                 காரணமாக ‘அவ்வுயிர்’ என்ற அஃறிணையோடு
                 மயங்கியது.

2. சொல்நோக்கு :  அரசு வந்தது. இங்கு அரசு என்பது அரசன் என்று
                 பொருள்பட்டு உயர்திணையைக் குறித்தாலும் சொல்
                 நிலையில் அஃறிணையாக இருப்பதால் அஃறிணை
                 முடிபை ஏற்றுள்ளது. எனவே இங்கு உயர்திணையும்
                 அஃறிணையும் மயங்கியது.

3. கோபம்         : அவன் தந்தை வந்தது. சொல்லுவோனின்
                   கோபத்தினால் தந்தை என்ற உயர்திணைச் சொல்
                   அஃறிணை முடிவு பெற்று மயங்கியது.

4. உயர்பு (மேன்மை) : ஒருவர் வந்தார். இங்கு உயர்வினால் ஒருமையும்
                    (எழுவாய்) பன்மையும் (பயனிலை) மயங்கியது.

5. உவகை (மகிழ்ச்சி) : தன் புதல்வனை என் அம்மை வந்தாள் என்பது
                   மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாயிற்று.

6. சிறப்பு          : கண்போலச் சிறந்தவனை, ‘என் கண் வந்தது’ என்பது
                  சிறப்பினால் உயர்திணை அஃறிணையாய் மயங்கியது.