சுவாமிநாதம்134சொல்லதிகாரம்
 

     திணையும் பாலும் கலந்து வரும் தொடர்கள் முடிவு பெறுதல்.

1. சிறப்பு   : ‘திங்களும் சான்றோரும் ஒப்பர்’ என்று அஃறிணையும்
            (திங்கள்) உயர்திணையும் (சான்றோர்) கலந்து திங்கள்
            சிறப்பு உடையதால் உயர்திணை முடிபே பெற்றது.

2. இழிவு   : ‘வடுகர், அருவாளர், வான், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை
            என்று இவையாறும்’ - இங்கு வடுகர் முதலிய உயர்திணைப்
            பெயர்கள் சுடுகாடு முதலிய அஃறிணைப் பெயர்களோடு
            கலந்து இழிவு காரணமாக ‘இவை’ என்று அஃறிணைச்
            சொல்லால் குறிக்கப்பெற்றுள்ளது.

3. மிகுதி : ‘பார்ப்பார், தவரே சுமந்தார், பிணிப்பட்டார். மூத்தார், இளையார்,
          பசுப்பெண்டிர், என்று இவர்கட்கு’ - இங்கு பசு என்ற ஒரு
          அஃறிணைச் சொல்லும் பார்ப்பார் முதலியன உயர்திணைச்
          சொல்லும் கலந்திருந்தாலும் உயர்திணைச் சொற்கள் மிகுதியாக
          இருப்பதனால் ‘இவர்’ என்று உயர்திணைச் சொல்லாற்
          குறிக்கப்பட்டுள்ளது.

     இது நன்னூல் 375, 376, 378, ஆகிய சூத்திரங்களோடு ஒத்தது;
ஆனால் இலக்கண விளக்கம் 295, 296, 297, 298, 299, ஆகிய
சூத்திரங்களைத் தழுவியது. ஏனெனில் நன்னூலார் திணை - பால் வழுவிற்கு
உவப்பு, உயர்வு, சிறப்பு, செறல், இழிவு, என்ற ஐந்து காரணம் (379) கூற
இலக்கண விளக்கத்தார் சொன்னோக்கு’ என்ற மற்றொன்றையும் சேர்த்துக்
கூறியதனையே (இ.வி. 299) இவர் பின்பற்றியுள்ளார்.

     பாட விளக்கம் : மூலத்தில் (4வதுவரி) திணையால் (விரவில்) என்று
இருந்த பாடம் ‘திணைபால்’ என்று திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.