59. |
ஒருமைபன்மை யாய்,பன்மை ஒருமையாய் உழற்வாம்; ஓரிடமே பலவிடமுந் தழுவல்வழு விலவாந்; தரும்இறப்பு, நிகழ்வு,எதிர்வில் எதிர்வுமுக் காலமுமே தழுவுமுக் காலப்பொருளு நிகழ்ச்சியினுந் தோன்றும்; பொருளினது புடைபெயர்ச்சி நிகழ்காலம் என்பார்; புகலும்வினைக் குறை,நிகழ்வி னற்இறப்பு,எதிர்வின் | |
முடிப்பார்; |
| |
விரைவுஇயல்பு மிகவுதெளி வாற்பிறவார்கால விதிமூன்றும் ஏற்புழி நின்றுடன் மயங்கும் அறியே. (6) | பால், இடம், காலம் ஆகியவற்றில் ஏற்படும் வழு விளக்குகின்றது. உரை : ஒருமைப்பாலிற் பன்மைப்பாற் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைப்பாற் சொல்லையும் ஓரிடத்திற்குரிய சொல்லைப் பிற இடங்களுக்குரிய சொல்லாலும் தழுவிக் கூறினாலும் தவறு இல்லை. இறப்பு, நிகழ்வு, எதிர்வு, எனக் காலங்கள் மூன்று. மூன்று காலத்திலும் ஒரே தன்மையவாகத் தழுவிச் செல்லும் பொருள்களை நிகழ்காலத்தினால் சொல்லுவார். பொருளினது புடைபெயர்ச்சி நிகழ்காலம் என்று கூறுவர். விரைவினாலும் இயல்பினாலும் மிகுதியினாலும் பிற காரணங்களாலும் மூன்று காலங்களும் ஒன்று மற்றொன்றாகச் சொல்லப்பெறும். விளக்கம் : ஒருமை பன்மை: ‘அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச்சோழர்’ (அகம் 96.12) - தந்தை என்ற ஒருமை எழுவாய் சோழர் என்ற பன்மை பயனிலையை ஏற்றது. பன்மை ஒருமை: இரண்டு கண்ணும் சிவந்தது. தன்மையில் படர்க்கை சேர்த்துச் சொல்லுதல்: ‘சாத்தன்தாய் இவண் செய்வலோ’ - சாத்தன் தாயாகிய யான் இவை செய்வேன் - என்று பொருள் படுவதால் தன்மையில் சாத்தன் |