சுவாமிநாதம்136சொல்லதிகாரம்
 
தாய் எனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது.

     நெருப்பு சுடும் என்பது மூன்று காலத்துக்கும் பொருந்துவதால் நிகழ்கால
வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

     விரைவு : சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை யாராவது அவசரமாகக்
கூப்பிட்டால் ‘சாப்பிட்டேன்’ என்பது விரைவு காரணத்தினால் நிகழ்காலம்
இறந்தகால விகுதியைப் பெற்றது. சாப்பிடப் போகிறவனும் சாப்பிட்டேன்
என்று கூறுவது உண்டு. இங்கு விரைவால் எதிர்காலத்திற்குரிய பதில்
இறந்தகாலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிகுதி : முயன்று படிப்பவன் முதல் வகுப்பு பெறுகிறான். முயன்று படித்தவன்
முதல் வகுப்பு பெற்றான். இயல்பும் தெளிவும்: இங்கு இறப்பும் எதிர்வும்
நிகழ்காலத்தோடு மயங்கும் முயன்றால் வெற்றி பெறுவாய் - எதிர்காலம்
இறப்போடும் நிகழ்வோடும் மயங்கியது. பிறகாரணம்: சென்ற ஆண்டு தினம்
குளிப்பேன் - இறப்பு எதிர் காலத்தில் வந்தது.

     முற்பகுதி நன்னூல் 380, 382, 383, 384ஆம் சூத்திரங்களைத் தழுவியது.
அடுத்த பகுதி முத்து வீரியம் 473ஆம் சூத்திரத்தை ஒட்டியது (‘வினைக்கிளவி
நிகழ்வு’ என்பது) முதற்பகுதிக்குரிய கருத்தை இலக்கண விளக்கம் 300ஆம்
சூத்திரம் கூறினும் காலம் பற்றி இலக்கண விளக்கத்தில் கூறப்படாததால்
இச்சூத்திரம் நன்னூலைத் தழுவியது என்றே கொள்ள வேண்டும்.

     பா. வி. ‘தரும் இறப்பு நிகழ்வு எதிர்விலெதிர்வு முக்காலமுமே’
என்பதில் (2-வது வரி) எதிர்காலத்தை ‘எதிர்வில் எதிர்வு’ என்றது
பொருத்தமாகப் படவில்லை. எனவே ‘எதிர்வில் என்ற சொல்லே மிகையாக
எழுதப்பட்டுள்ளதாகக் கொள்ளவேண்டியுள்ளது.