சுவாமிநாதம்147சொல்லதிகாரம்
உருபும், ஈரெச்சங்களும், முற்றுச்சொல்லை விரும்பி ஏற்று முடியும்.
நிலைப்பெயரும் வினையும் உம்மை பெற்று முடியும்; சூழ்நிலையால்
ஒருபொருளை வேறுபடக் குறித்தோன், சொல் சரியாக விளங்கா விட்டால்
அதையும் விளக்கிச் சொல்ல வேண்டும்.
 
விளக்கம் : குறுகுறு நடந்து (புறம். 188) என்ற தொடரில் குறுகுறு
என்பது குறு என்று தனித்து இயங்காது.
 
கிழவன்    >  கிழவோன்
நல்லான்   >  நல்லோன்
இல்லாள்   > இல்லோள்
மறவர்     > மறவோர்
அடியார்    > அடியோர்
சொன்னாய் > சொன்னோய்
 
எதிர்மறையில் உருபு : பழத்தைத் தின்னவில்லை.
 
எதிர்மறையில் பெயரெச்சம் : படிக்காத நூல்.
 
எதிர்மறையில் வினையெச்சம் : எழுதாமல் இருந்தான்.
 
உருபு அடுக்கல் : என்னோடும் அவனோடும் பேசினான்.
 
    சாத்தனுக்கும் கண்ணனுக்கும் கொடுத்தான்.
 
பெயரெச்ச அடுக்கல் : படிக்காத பேசாத பையன்.
 
வினையெச்ச அடுக்கு : ஆடிப்பாடி விளையாடினான்.
 
இடைப்பிறவரல்
 
வேற்றுமைக்குப் பின் : வாளால் வேகமாக வெட்டினான்.
 

:பெயரெச்சத்துக்குப் பின்

: ஓடிய அழகான பையன்.
 
வினையெச்சத்துக்குப் பின் : படித்து வெற்றியோடு போனான்.