|         சூத்திரங்களையும்    தொல்காப்பியர் 53 (சொல். 50) ஆம் சூத்திரத்தையும்        தழுவியது.	 			| 64.  | 	
		பேச்சிரட்டைச் சொல்இரட்டுப் பிரிந்து இசையாதாகும்.  		     பெயர் வினையின், ன,ள,ர,ய, ஈற்றயலின் அ,ஆ, ஓவாம்;  		ஓச்சுருவு ஈரெச்சம் எதிர்மறுக்கினும், பேர்உகர  		     உருபுபல அடுக்கினு(ம்), முற்று அடுக்கினும், ஈரெச்ச  		மூச்சது பல்லடுக்கினும், பொருளது ஒன்றே; முடியு(ம்)  		     முற்றுருபு, ஈரெச்சம், இடைப்பிற சொலும் வந்துஇயலும்;  		வீச்சுருபு எச்சங்கண் முற்றவாய் நிலைப்பெயரும்,  		     வினையும் உம்மைபெறும், குறித்தோன்கூற்று வினாயலுமே.  | 	 		|   | 	
			
			 (11)  | 	
			  | 	 	 		மரபுகள் சிலவற்றை விளக்குகின்றது.		      உரை : இரட்டைக்கிளவி இரட்டித்து நிற்றலிலிருந்து பிரிந்து          நிற்கமாட்டாது.		      பெயர்ச்சொல்லிலும் வினைச்சொல்லிலும் இறுதியில் நிற்கும், னகர,          ளகர, ரகர, யகரங்களின் முன்நிற்கும் அகரமும் ஆகாரமும் ஓகாரமாக மாறும். 	       வேற்றுமை உருபும்,     பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய இரண்டு      எச்சங்களும், உடன்பாட்டில் கூறாமல் எதிர்மறையில் கூறினும் பொருள்      நிலைதிரியா.                 பல உருபுகள் தம்முள்     தொடர்ந்து அடுக்கி வந்தாலும் வினைமுற்றும்      பெயரெச்சமும் வினையெச்சமும் பல அடுக்கி வந்தாலும் பொருள் நிலையில்      ஒன்றே.           முற்று வினைச்சொற்களுக்கும்     வேற்றுமை உருபு ஏற்ற சொற்களுக்கும்      பெயரெச்ச வினையெச்சச் சொற்களுக்கும் அவை கொண்டு முடியும் பெயர்ச்      சொற்களுக்கும் வினைச் சொற்களுக்கும் இடையே பிற சொற்கள் வந்து      பொருந்துவதும் உண்டு.  	 |