சுவாமிநாதம்145சொல்லதிகாரம்
 

     ‘மா’ என்ற சொல்லை மா வளர்ந்தது என்று வினை கொடுத்துச்
சொன்னாலும் அது மாமரத்தையும், விலங்கையும் சுட்டியே நிற்கும். இம்மா
நீளம் என்று பெயர்ச் சொல்லோடு வரும்போதும் பெரிய மா என்று இடைச்
சொல்லோடு வரும் போதும் வேறுபடுத்தி அறிய முடியவில்லை. எனவே
மாமரம் வளர்ந்தது, மாவிலங்கு நீளம் என்பன போல விதந்து சொன்னால்
பொருள் தெளிவு ஏற்பட்டுவிடும்.

     பலமொழிபேசும் மக்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டைத் தமிழ்நாடு
என்று வழங்குவது தமிழ்மக்கள் பெரும்பான்மையாக (பன்மை பற்றி) வாழும்
காரணத்தினாலும் ஆகும். அவ்வாறே தலைமைபற்றி ஏற்பட்டது
வைத்தீஸ்வரன் கோவில் எனலாம்.

     போரில் மூவர் இறந்தார் என்னும்போது மூவர் என்பது போரில்
என்னும் அடுத்து வந்த பெயர்ச்சொல்லால் ஆண் மக்களைக் குறித்தது.

     மூவர் போரிட்டார் என்னும்போது வினைச்சொல்லால் ஆண்
மக்களைக் குறித்தது.

     அரசி மகப்பேறு பெற்ற இடத்து மூவர் இருந்தார் என்னும் போது
மகப்பேறு என்னும் பெயர்ச் சொல்லால் மூவர் என்பது பெண் மக்களைக்
குறித்தது.

     முயன்று படிப்பவர் முதல்வகுப்பில் வெற்றிபெறுவர் என்ற சொல்
முயன்று படிக்காதவர் வெற்றிபெற மாட்டார் என்ற இனப் பொருளையும்
தரும்.

     தமிழ் வாழ்க என்று சொல்லும்போது பிறமொழி வீழ்க என்று பொருள்
தராது. எனவே இனம் சுட்டவில்லை.

     இது இலக்கண விளக்கம் 318, 320, 322 ஆகிய